மதுரை

தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையிலும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ஆட்சியர்களும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற நிலையிலும், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நிலையிலும் இருக்கும் இடங்களுக்கு அபராதம் விதித்து சுத்தம் செய்ய உத்தரவிடுகின்றனர்.

அதன்படி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மதுரை கே.கே. நகர் எம்ஜிஆர் சிலை பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினார். இப்பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடை மற்றும் உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் தலா ரூ.2000 அபராதம் விதித்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாக தண்ணீர் தொட்டி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமின்றி உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.