அமெரிக்காவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  திருமதி உலக அழகி போட்டியில் கோவை சவுரிப்பாளையத்தைச்  சேர்ந்த ஜெய ஸ்ரீ என்பவர்  வெற்றி பெற்று திருமதி உலக அழகி பட்டத்தை  வென்றார்.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

ஜெயஸ்ரீ மகேஷ் அமெரிக்காவில் கடந்த 13-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக நடந்த திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர்.

இதில் அழகு, திறமை, புத்திசாலித்தனம் என பல கோணங்களில்  வைக்கப்பட்ட டெஸ்ட்களில் ஜெயஸ்ரீ மகேஷ்  தனது திறமையை நிரூபித்து திருமதி உலக அழகி பட்டத்தைச் சென்றார்.

ஜெய ஸ்ரீ ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016-ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது என ஜெய ஸ்ரீ தெரிவித்தார்.

.

தாய்-மகள் உறவு என்பது நல்ல தோழிகள் போல் இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். இதுதவிர இளம் வயதினரிடையே பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று போட்டியின்போது ஜெய ஸ்ரீ அளித்த பல புத்திசாலித்னமான பதில்கள் அவருக்கு திருமதி உலக அழகி பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது..