கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் 2 கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சூளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்தவர்கள் கோகுல்நாத், சிதம்பரம்நாத், கவுதம் ஆகியோர் என தெரியவந்துள்ளது. கார் வேகமாக இயக்கப்பட்டதே விபத்து காரணம் என்று கூறப்படுகிறது. இந்த புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுதாகவும் கூறப்படுகிறது. விபத்தை தடுக்க நீலாம்பூரில் வேகத்தடை அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோனோர் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. 

இவர்கள் கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கிரிக்கெட் விளையாடுவதற்காக மைதானம் சென்றபோது தான் அதிவேகத்தில் கார் இயங்கி போது விபத்து நிகழ்ந்துள்ளது.