வேலூர்

வேலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் நடக்கும் முறைகேட்டைக் கண்டித்து வேட்பாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், மாதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. 

பதினோறு இடங்களுக்கு 57 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  43 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. மூன்று பேர் வாபஸ் பெற்றனர். 

தகுதியான வேட்பாளர்கள் 37 பேரின் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 7) அன்று தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி புதிதாக 11 இயக்குநர்களின் பட்டியல் ஒட்டப்பட்டது. இதுகுறித்து வேட்பாளர்களும், உறுப்பினர்களும் தேர்தல் அலுவலரிடம் கேட்டதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, 5-ஆம் தேதி சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமையும் அந்தப் போராட்த்தைத் தொடர்ந்தனர்.

இந்த்க நிலையில், அந்தப் போராட்டத்தை நேற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து நடத்தினர். இதனால் மூன்று நாள்களாக கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.  

அந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.