சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஜூன்.12 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!!
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாநகரில், கலைஞர் சிலை திறப்புவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள வரும் ஜூன் 11 ஆம் தேதி சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூன் 11 ஆம் தேதி சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி உருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதையும் படிங்க: சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலுக்குப் பின் மீண்டும் இயக்கம்
அதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்கப்படும். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும்.
இதையும் படிங்க: தனியார் மூலம் ஓட்டுநர்களை நியமிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் - இராமதாஸ் கோரிக்கை
அணையின் நீர்இருப்பை பொறுத்து நீர் திறப்பு தேதி மாறுபடும். கடந்தாண்டு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.