Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பு.. ! ஊரடங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அனைத்து முதல்வர்களுடன் ஏப்ரல் 27ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர், அதிகாரிகளுடன் முதலாமைச்சர் ஆலோசணை மேற்கொள்கிறார்.
 

CM Stalin Meeting With Health officer about corona lockdown Extension
Author
Tamilnádu, First Published Apr 24, 2022, 11:33 AM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அனைத்து முதல்வர்களுடன் ஏப்ரல் 27ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர், அதிகாரிகளுடன் முதலாமைச்சர் ஆலோசணை மேற்கொள்கிறார்.

உருமாறிய கொரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உத்தர பிரதேசம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25 க்கும் கீழ் குறைவாக பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 50 க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் முக கவசம், சமூக இடவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனால் பொது இடங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக்த்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி தயார் நிலையில் வைத்திருக்கும் படி மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மருத்துவத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வரும் 8 ஆம் தேதி முதல் வாரந்தோறு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அனைத்து முதல்வர்களுடன் ஏப்ரல் 27ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர், அதிகாரிகளுடன் முதலாமைச்சர் ஆலோசணை மேற்கொள்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios