Asianet News TamilAsianet News Tamil

CM Stalin Speech : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. முதல்வர் அவசர ஆலோசனை.. மீண்டும் அமலாகிறதா ஊரடங்கு?

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
 

CM Stalin Discussion with officials about corona Virus
Author
Tamilnádu, First Published Apr 25, 2022, 10:55 AM IST

மீண்டும் ஊரடங்கு..?

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில், காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,” சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.

முககவசம் கட்டாயம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பலியாகினர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு, கடும் இன்னலை சந்தித்தனர்.இந்நிலையில் கடந்த 3வது அலை காலத்தில் நம் அரசு எடுத்த நடவடிக்கையால் பெரும் பாதிப்பை தவிர்த்தோம். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மக்கள் இயல்வு நிலைக்கு மெல்ல, மெல்ல திரும்பி வருகின்றனர். 

அதே சமயம் பொருளாதார நிலைய சீரடைந்து, மக்களின் வாழ்வாதரமும் படிபடியாக உயர்ந்து வருகிறது. இச்சூழலில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னை ஐஐடி பயிலும் 60 மாணவர்கள் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கொரோனா 4 வது அலை:

எனவே கொரோனா 4 வது அலை வந்தால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசியே முக்கியமாகும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும்.பொது மக்கள் கூடும் அனைவரும் முகக்கவசம் அணிய நடவடிக்கை வேண்டும். 

தடுப்பூசி - பேராயுதம்:

மக்களின் பொருளாதார நிலை பாதிக்காத வண்ணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தமிழகத்தில் 91.5 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 1.48 கோடி பேர் 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios