முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி... என்னாச்சு அவருக்கு?
லேசான காய்ச்சல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான காய்ச்சல் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதம் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பரிசோதனை மேற்கொள்ள அவர் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைக்கு பின்பு தான் அவரது உடல்நிலை குறித்து தெரிய வரும் என கூறப்பட்டது. மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதா அல்லது இரவே வீட்டிற்கு செல்லலாமா என்று முடிவு செய்யப்படும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது, ஆனால்..? அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய முதுகுவலி தொடர்பாக வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் மருத்துவமனைக்கு சென்றதை அடுத்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.