காஞ்சிபுரம்.. வரதராஜ பெருமாள் கோவிலில் வழங்கப்பட்ட பூரண கும்ப மரியாதை - மகிழ்ச்சியோட ஏற்ற முதல்வர் ஸ்டாலின்!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், முதல்வர் ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவங்கி வைத்து அவர் பேசினார்.
அதன் பிறகு சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய சென்று இருந்தார். இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் செல்லும் பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் வைபவம் நடைபெற்ற திருக்கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார்.
பால் விலை ஏறிட்டே போகுது.. 28 மாதத்தில் 8 முறையா.? அப்போதைய ரேட் இவ்வளவு தான் - இபிஎஸ் கண்டனம்
அப்போது அக்கோவில் சார்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்த பூரண கும்ப மரியாதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அர்ச்சகர்கள் வழங்கிய பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டார்.
அப்பொழுது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவரிடம் அளித்த சில மனுக்களையும் பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஸ்டாலின் அவர்களின் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்ட மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடையுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேகமெடுக்கும் டெங்கு; அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு