Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த பொங்கல் பரிசு தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

cm mk Stalin start a pongal gift scheme for people in ration shop
Author
First Published Jan 9, 2023, 12:52 PM IST

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

கன்னியாகுமரியில் மகனின் கடனுக்கு உதவ முடியாத வருத்தத்தில் பெற்றோர் தற்கொலை

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை  மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், ஆகியவற்றை 2,19,33,342 குடும்பங்களுக்கு 2429.05 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் 487.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.  

தமிழக அரசின் அறிவிப்புகளை வாசிக்க மறுத்த ஆளுநர் .? சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியதால் பரபரப்பு

அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (9.1.2023) சென்னை கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார். 

இப்பொங்கல் பரிசினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே  நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios