CM itaippati Palanichany Salem today goes

சேலம்:

கட்சியினர், மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளை சந்திக்க முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று சேலம் செல்கிறார்.

சென்னையில் இருந்து, கோவைக்கு, இன்று மதியம், 1:30 மணிக்கு விமானத்தில் வந்திறங்கும் முதல்வர் பழனிசாமி கார் மூலம் சேலம் அழைத்து வரப்படுகிறார்.

அங்கிருந்து வரும் பழனிசாமிக்கு, சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி சிமெண்ட் பேக்டரி அருகே, சங்ககிரி, மகுடஞ்சாவடி, வீரபாண்டி, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்க கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாலை, 4:00 மணிக்கு நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வரும் பழனிசாமி, அங்கிருந்து, கார் மூலம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் வழியாக மாலை, 5:00 மணிக்கு விழா மேடைக்கு வருகிறார்.

இரவு, 7:00 மணிக்கு விழாவை முடித்துக் கொண்டு, ஓமலூர் பிரதான சாலை வழியாக, மீண்டும், அவர் வீட்டிற்குச் சென்று, இரவு தங்குகிறார்.

நாளை காலை, அஸ்தம்பட்டியில் உள்ள பழைய சுற்றுலா மாளிகையில், கட்சியினர், மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளை சந்தித்துவிட்டு, கார் மூலம், கோவை சென்று, அங்கிருந்து, விமானம் மூலம், சென்னை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மார்ச், 16-ல் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதால், நாளை காலை, சென்னையில் இருக்கும் வகையில், இன்று இரவு இரயில் மூலம் சென்னை செல்லவும் வாய்ப்புள்ளது.

அவ்வாறு, அவசரமாக சென்னை செல்ல நேரிட்டால், அதற்கான பயண திட்ட மாற்றத்தை, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொள்வர் என தகவல்கள் கசிந்தன.