கடந்த சில  தினங்களாக சென்னையில் லேசான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.  இந்த மழையால் சென்னையே குளுகுளு ஊட்டி போல குளிர்ச்சியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரமே குளிர்ந்து போய் விட்டது.  புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் நகர்ப் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 

சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 13.8 மி.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 7 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை தூறல் விழுந்தது. சில பகுதிகளில் கனமழை பெய்தது.

 இதற்கிடையே இந்த மழை இன்னும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

மேலும் வேதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கூல் ஸ்டேடஸ் போட்டுள்ளார். அதில் 2013 ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் பருவமழை பெய்து வருகிறது. ஊட்டி போல காட்சியளிக்கும் இந்த குளுகுளு சூழலை அனுபவியுங்கள். இந்த மழை இன்று மாலை வரை தொடர்ந்து பெய்யும் எனக் கூறியுள்ளார்.