கடந்த ஒரு சில நாள்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மாமல்லபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் காலை நேர இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மாலை 5 மணிக்கே குளிர்காற்று வீசத் தொடங்குகிறது. இரவு முழுவதும் அதிகளவில் பனிபொழுவு காரணமாக மக்கள் குளிரால் நடுங்குகின்றனர்.

டிசம்பர் மாதம் ஏற்படும் பனி மூட்டம் இந்தாண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது. காலை 9 மணி ஆகியும் பனிமூட்டம் விலகிய பாடில்லை.

கடற்கரையோர சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் சிற்பங்களை சுற்றிப்பார்க்க காலை முதலே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் பனி மூட்டம் காரணமாக காலை 9 மணி ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவில்லை. மாலை நேரத்தில் வழக்கமான குளிர்ந்த கடல் காற்றுடன் பனியும் சேர்ந்து பொழிவதால் மாலை 6 மணிக்கு மேல் கடற்கரையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

இதனால், மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் பருவ நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும், உலக வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளையும் நமக்கு உணர்த்துகின்றன.

மேலும், காடுகளை அழித்து கட்டடடங்களாகவும், மரங்களை அழித்து அலங்கார பொருட்களாகவும் மாற்றும் நிலையில் இருந்து மாறினாலே சுற்றுச் சூழாலை பாதுகாக்க முடியும்.