திருவாரூர்

சாலையோர வணிகர்களுக்கு அடையாள அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வணிகர்கள் சங்கத் தலைவர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். நீடாமங்கலம் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வி.எஸ்.கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் கே.கைலாசம், மார்க்சிஸ்ட் நகரச் செயலர் சி.டி.ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சாலையோர வணிகர்கள் சங்க மாவட்டச் செயலர் டி.முருகையன், மாவட்ட பொருளாளர் எம்.பி.கே. பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது,

நகராட்சி, பேரூராட்சி சாலையோர வணிகர்களுக்கு அடையாள அட்டையை வழங்க வேண்டும்

வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனே நடத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கு.முனியாண்டி, தையல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.