திருச்சியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காத ஓட்டுநர் ஒருவரை சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கு அரசுப் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. பணி மனையில் இருந்த பேருந்துகளை எடுக்க தொழிலாளர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன.இந்நிலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை எடுப்பதற்காக வந்தார். அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை சூழ்ந்து கொண்ட சிஐடியு மற்றும் தொமு.சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் எல்லாம் நமது நன்மைக்காக்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்..பின்னர் ஏன் நீங்கள் பணி செய்வதற்காக வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த ஓட்டுநரை தொழிற்சங்கத்தினர் ஓட..ஓட..விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.