cinema producer theft to girl fried jewel in chennai valasaravaakkam
சென்னை வளசரவாக்கத்தில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் 72 சவரன் தங்க நகைகளை ஆட்டைய போட்ட சினிமா தயாரிப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலணி, அழகிரி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு சீர்காழியைச் சேர்ந்த அலீம்ஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனை வந்த வண்ணம் இருப்பதாக அலிம்சாவிடம் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
இதையடுத்து அலிம்சா தோஷம் கழித்தால் சரியாகி விடும் என்றும் அதற்காக உங்கள் வீட்டில் உள்ள நகைகளை கொடுங்கள் என்றும் விஜயலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.
அலிம்ஷாவின் இந்த பேச்சை நம்பி விஜயலட்சுமி தாலி செயின் உட்பட 72 சவரன் நகைகளை கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அலிம்ஷா அந்த நகைகளை திருப்பி தரவில்லை. இதையடுத்து விஜயலட்சுமி போலிசில் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நகைகளை வைத்து, அலிம்ஷா பாமரன் என்ற படத்தை எடுத்து வந்ததும், இதேபோல் பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அலீம்ஷாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 28 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
