முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில், முதல்முறையாக கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் கையெழுத்துடன் கூடிய அறிக்கையை பார்த்த அதிமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் தான் மறுபிறவி எடுத்துள்ளதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா போன்று வேடமணிந்த ஒரு சிறுமி ஒருவர், முதலமைச்சர் குணமடைந்து வெளியே வந்து மக்களை சந்திப்பது போல நடித்து காண்பிக்கும் வீடியோ வாட்ஸ் -அப்பில் வைரலாகியுள்ளது.

செல்வி.ஜெயலலிதா போன்றே பச்சை கலரில் புடவை அணிந்து அம்மா, அம்மா என்ற பாடலுக்கு தலையை ஆட்டி மக்களை சந்திப்பது போல் பாவனை செய்து அதிமுக தொண்டர்களின் அன்பை பெற்றுள்ளார் இந்த சிறுமி.
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த பிஜு ஜேக்கப் என்பவரின் மகளான இந்த சிறுமியின் பெயர் ஜானி.பி.மேத்யூ தரகன்.
U.K.G. படிக்கும் இந்த இளஞ்சிறுமி ஜெயலலிதா போன்றே நடந்து வந்து இரட்டை விரலை காண்பித்து மக்களை பார்த்து கும்பிடுவது போன்று நடித்து அசத்தியுள்ளார்.
பெரியவர்கள் மட்டுமின்றி சிறிய குழைந்தைகள் மனதிலும் முதலமைச்சர் இடம் பிடித்துள்ளார் என்பது இந்த வீடியோவின் மூலம் தெயரியவந்துள்ளது.
