நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராகவும், எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல

இறையன்பு உத்தரவு
பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகவும், எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக 12 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
