Asianet News TamilAsianet News Tamil

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள்..! அரசு அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவிட்ட தலைமை செயலாளர்

அரசு அலுவலகங்களில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச் சொற்களை காட்சி படுத்த அரசு அதிகாரிகளுக்கு  தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 

Chief Secretary irai anbu has ordered that one Thirukkural should be written daily in Tamil Nadu government offices
Author
First Published May 9, 2023, 11:27 AM IST

அரசு அலுவலகங்களில் திருக்குறள்

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும்  மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத் துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊாரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Chief Secretary irai anbu has ordered that one Thirukkural should be written daily in Tamil Nadu government offices

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட இறையன்பு

மேலும் திருக்குறளின் முப்பாக்களில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய அதிகாரங்களில் அதன் பொருளுடனும் தமிழ் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் ஓர் ஆங்கில சொல்லை அதற்குரிய தமிழ்ச் சொல்நுடனும் 4×3 என்ற அளவில் அனைத்து அலுவலக கரும்பலகை வெள்ளை பலகையிலும் நாள்தோறும் எழுதிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

தீவிரமடையும் மோக்கா புயல் சின்னம்.! தமிழகத்தில் எந்த எந்த மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.? வானிலை மையம் தகவல்
 

Follow Us:
Download App:
  • android
  • ios