Asianet News TamilAsianet News Tamil

தாகூர் நோபல் பரிசு வாங்கவில்லை -முதல்வர் பிப்லப் குமார் சர்ச்சை பேச்சு

chief minsiter biblap kumar speech
chief minsiter biblap kumar speech
Author
First Published May 11, 2018, 3:50 PM IST


திரிபுராவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பிப்லப் குமார் தேவ் இருந்து வருகிறார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் வந்துவிட்டது என்றார், அதன்பின், சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்றும் பேசினார்.

அதுமட்டுமல்லாமல் வேலையில்லாத இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்காமல் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம், அல்லது மாடு மேய்க்கலாம் அவ்வாறு செய்தால், நல்ல ஊதியம் ஈட்ட முடியும் என்று திப்லப் பேசி இருந்தார்.

இவரின் பேச்சு பயந்து பாஜக தலைமை கர்நாடகத் தேர்தலில் கூட பிரச்சாரத்துக்கு திப்லப் தேவை பாஜக தலைமை அழைக்கவில்லை.

chief minsiter biblap kumar speechஇதற்கிடையே கடந்த வாரம் முதல்வர்கள் மாநாட்டின்போது, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவுக்கு அழைப்புவிடுத்திருந்த பிரதமர் மோடி அவரிடம் கடுமையான பேசியதாகச் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையே திரிபுராவில் உள்ள உதய்பூரில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 1913-ம் ஆண்டு ரவிந்திரநாத் தாகூர் தனது கவிதைக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார் எனப் பேசினார்.

முதல்வர் பிப்லப் குமார் தேவ் பேசிய வீடியோ காட்சிகள் சமூகஊடகங்களில் வேகமாகப் பரவின. உண்மையில் ரவிந்திரநாத் தாகூர் தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை அவர் திருப்பி அளிக்கவில்லை

chief minsiter biblap kumar speech

அதேசமயம், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நைட்ஹூட் பட்டத்தை வாங்க மட்டுமே தாகூர் மறுத்துவிட்டார். திரிபுரா முதல்வரின் கருத்துக்களை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த  தலைவர் கவுதம் தாஸ் கூறுகையில், திரிபுரா முதல்வரின் முட்டாள்தனமான பேச்சு எல்லைக் கடந்து சென்றுவிட்டது என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios