தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Chief Minister Stalin undergoes angiography test at hospital தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக ஜூலை 22, 2025 அன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு மூன்று நாட்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் பணிகளை கவனிக்கும் முதலமைச்சர்

 மருத்துவமனையில் இருந்தபடியே, முதலமைச்சர் ஸ்டாலின் தனது அரசு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது திட்டங்களின் நிலை, பெறப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கையையும் கேட்டறிந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருதய பாதிப்பு தொடர்பாக கண்டறிய ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருக்கதாக கூறப்படுகிறது.

முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை

இது தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிவடைந்து நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். முதல்வர் வீடு திரும்புவது தொடர்பாக மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார்.