சேலம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணை திறப்பு
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில்17.37 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பயிர்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி மாதம் இறுதியில் தண்ணீர் நிறுத்தப்படும். தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 3.26 லட்சம் ஏக்கரிலும், 2019ஆம் ஆண்டில் 2.91 லட்சம் ஏக்கரிலும், 2020ஆம் ஆண்டில் 4.70 லட்சம் ஏக்கரிலும்,2021ஆம் ஆண்டில்4.91 லட்சம் ஏக்கரிலும்,2022ஆம் ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

மலர் தூவி திறந்து வைத்த முதலமைச்சர்
இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்டா மாவட்டங்களில் 90 கோடி மதிப்பீட்டில் 4773 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்ட 90ஆண்டு வரலாற்றில், மேட்டூர் அணையில் குறித்த தேதியான ஜூன் 12ஆம் தேதி இந்த ஆண்டுடன் 19 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நீர்மட்டம் அதிகரித்து வந்ததால் மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்களை தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 3 நாட்களுக்குள் கல்லனை பகுதியையும், 7 நாட்களுக்குள் கடைமடை பகுதியையும் தண்ணீர் சென்று சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
