முக்கொம்பு சுற்றுலா தளத்தில் இளம்பெண்ணுக்கு காவலர்கள் பாலியல் தொல்லை!எடுத்த நடவடிக்கை என்ன.? ஸ்டாலின் விளக்கம்

முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Chief Minister Stalin has said that action will be taken against the policemen who sexually harassed the young woman KAK

முக்கொம்பில் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பேசிய   எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவலர்களால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் சிறுமி புகார் அளித்தும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லையென குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

  கடந்த அக்டோபர் 4ம் தேதி மாலை 4 மணியளவில், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகம், முக்கொம்பு சுற்றுலாத் தலத்திற்கு ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில் பணிபுரிந்து வரும் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் அனுமதியோ, 

Chief Minister Stalin has said that action will be taken against the policemen who sexually harassed the young woman KAK

விடுப்போ பெறாமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமலும், ஜீயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து, பல நாட்களாகப் பணிக்கு வராமல் இருந்த காவலர் சித்தார்த்தன் என்பவருடன் இணைந்து சென்று, சுற்றுலாத் தலத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர் மற்றும் 17 வயது பெண்ணை மிரட்டி, அந்த இளைஞரைத் தாக்கி விரட்டி அனுப்பிவிட்டு, உடனிருந்த பெண்ணை அந்தக் காவலர்கள் தாங்கள் வந்திருந்த தனியார் காரில் ஏற்றி, அவரிடம் தவறான முறையில் நடந்திருக்கிறார்கள் என கூறினார். மேலும், அந்தப் பெண் சத்தம் போட்டதால், அவரைக் காரிலிருந்து இறக்கிவிட்டிருக்கிறார்கள் என கூறிய அவர், 

Chief Minister Stalin has said that action will be taken against the policemen who sexually harassed the young woman KAK

இதனையடுத்து அந்தப் பெண் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்ததன் பேரில், அங்கு பணியிலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தக் காவலர்களை விசாரித்தபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறபோது, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சொன்னார். அது உண்மையல்ல. அந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், உடனடியாக எஸ்.பி. அவர்களைத் தொடர்பு கொண்டு, அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார்.

Chief Minister Stalin has said that action will be taken against the policemen who sexually harassed the young woman KAK

உடனடியாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய அவர், மேலும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் அன்றே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மேலும், குற்றம் இழைத்த காவலர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய பிரிவுகளின் கீழ், துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

Chief Minister Stalin has said that action will be taken against the policemen who sexually harassed the young woman KAK

விரைவில் இதில் விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் முதலமைச்சர் உறுதிப்பட கூறினார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios