மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்கும் நான்... கவலையோடு தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்துள்ளேன்..! மு.க.ஸ்டாலின்

தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும். மனம் விட்டுப் பேசுங்கள், 'பள்ளியில் என்ன நடந்தது என்று கேளுங்கள், என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேளுங்கள். இன்றைய நாள் எப்படி போனது என்ன தேவைப்படுகிறது' என்றெல்லாம் நாள்தோறும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chief Minister Stalin has asked everyone to work together to control drugs

போதைப்பொருட்களுக்கு முற்றிலுமாக தடை

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்கிற தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  பெரும்பாலும் நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில் குறிப்பிட்டு சொல்வேன். “மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்” என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றபோது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான கவலை அளிக்கும் மனநிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறேன்.  தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்கள் தொகையும், அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும் வருத்தமும் அதிகமாகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான முறைகளில் நாம் சென்றாக வேண்டும். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது! போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் இரண்டாவது வழி. முதல் வழி சட்டத்தின் வழி! இதனை அரசும் - குறிப்பாக, காவல் துறையும் கவனிக்கும் இரண்டாவது வழி என்பது விழிப்புணர்வு வழி! பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அத்தகைய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். 

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர தீ விபத்து.!சம்பவ இடத்திலேயே துடி,துடித்து உடல் கருகி 2 பேர் பலி

Chief Minister Stalin has asked everyone to work together to control drugs

சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்யவேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடந்தது. எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயமாக போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். மலையடிவாரங்களைக் கண்காணித்தாக வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும். எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோர மாவட்டங்களில் நிச்சயமாக கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். காவல் துறையினரின் ரோந்து அதிகரிக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.அரசும் இது தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.

பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் கெஜ்ரிவால்...! உற்சாகத்தில் திமுகவினர்

சட்டங்களைத் திருத்த இருக்கிறோம். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம். போதை மருந்து விற்பவர்களது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட உள்ளது. EXPRE போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு என்று தனியாக ஒரு இன்டெலிஜென்ஸ் செல்" ஏற்படுத்தப்பட இருக்கிறது இதற்கான உறுதியை மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.இவை அனைத்தும் அரசாங்கத்தின் கடமை! இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரியைப் போலச் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்றும் அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்திருக்கிறேன். 

Chief Minister Stalin has asked everyone to work together to control drugs

  போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாகக் கருத முடியாது. இந்தச் சமூதாயத்தையே கெடுக்கக்கூடிய குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயைப் பரப்பக்கூடிய குற்றவாளிகளாக அவர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் “திருடாதே" என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டை எழுதினார்கள் ரொம்ப ஃபேமஸ் ஆன பாட்டு, "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று எழுதினார் பட்டுக்கோட்டையார். சாதாரண நோயாக இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர். குடும்பம், உறவினர்கள் போதும்! ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சிகள் எடுத்தாக வேண்டும். 

Chief Minister Stalin has asked everyone to work together to control drugs

போதைதான் கொலை கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. இத்தகைய குற்றம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் போதையை பயன்படுத்துபவர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது போதை உட்கொண்ட நிலையில் இக்குற்றத்தினைச் செய்திருப்பார்கள்.ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது| பாதி நேரம் பெற்றோருடனும், பாதி நேரம் ஆரிரியர்களுடனும்நாள் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றொர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும். மனம் விட்டுப் பேசுங்கள், 'பள்ளியில் என்ன நடந்தது என்று கேளுங்கள், கஎன்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேளுங்கள். இன்றைய நாள் எப்படி போனது என்ன தேவைப்படுகிறது' என்றெல்லாம் நாள்தோறும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள் வெளியில் எங்கேயாவது போவதென்றால் சேர்ந்து போங்கள். நண்பர்களாக அவர்களை அணுகுங்கள்! அன்போடு அவர்களிடம் பேசுங்கள்! எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்! அதே மாதிரி நான் கண்டிப்பு. கண்டிப்பு நேவை தான். ஆனால் அதே கண்டிப்பும் ஆபத்தாகவும் போய் முடிகிறது. அதே மாதிரி கவனிப்பே இல்லாத வாழ்க்கையும் ஆபத்துதான்.

Chief Minister Stalin has asked everyone to work together to control drugs

இதே கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு! நீங்கள் கண்டிப்புடனும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் கனிவுடனும் இருக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம் படிப்பைத் தாண்டியும் பல நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள் முக்கால் மணிநேரப் பாடவேளையில் ஐந்து நிமிடமாவது பொதுவான விஷயங்களை அவர்களிடம் பேசுங்கள் வகுப்பில் யாராவது சோர்வாக காணப்பட்டால், யாரிடத்திலும் ஒட்டாமல் இருந்தால், அந்த மாணவ, மாணவியரைக் கூப்பிட்டு தனியாக அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்களும் உங்கள் பிள்ளைகள்தான். அவர்கள் நல்லவர்களாக வளர்ந்தாலும், பெருமை உங்களுக்குத்தான் அவர்கள் கெட்டவர்களாக ஆனாலும். தாழ்ச்சி உங்களுக்குத்தான். ஆக பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்.! முதலமைச்சர் அழைப்பு கேலிக்கூத்தாக உள்ளது...சீறிய ஆர்.பி.உதயகுமார்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios