Asianet News TamilAsianet News Tamil

ஓட்டப்பந்தயத்தில் ஓடிய பள்ளி மாணவன்.! மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்- உலுக்கிய இறப்பு செய்தி - ஸ்டாலின் வேதனை

Shocking News !!  விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Chief Minister Stalin condoles the death of a schoolboy who participated in a sports competition due to a heart attack
Author
First Published Aug 25, 2023, 2:53 PM IST

விளையாட்டு போட்டி- பள்ளி மாணவன் மரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டுப் போட்டியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரிஷிபாலன் கலந்து கொண்டுள்ளார். 400  மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தால் அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அப்போது ரிஷிபாலன் மாரடைப்பால்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களை  மட்டுமில்லாமல் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம். தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில் மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு...

Chief Minister Stalin condoles the death of a schoolboy who participated in a sports competition due to a heart attack

நிவாரண உதவி அறிவித்த முதல்வர்

காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிருந்த வருத்தமடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

விளையாட்டு போட்டிக்காக 4 மணி நேரம் வெயிலில் நின்ற மாணவன்!சுருண்டு விழுந்து பலி-அரசுக்கு எதிராக சீறும் அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios