சிறுத்தை தாக்கி துடி துடித்து பலியான பெண், சிறுமி... தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு- முதலமைச்சர் உத்தரவு
சிறுத்தை தாக்கியதில் விலை மதிப்பில்லாத இந்த இரு இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை தாக்கியதில் இரண்டு பேர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி மூன்று வயது அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்று கடித்து கொன்றது. இதே போல கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரிதா என்ற பெண்மணி உயிரிழந்தார். இந்த சம்பவம் நீலகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுத்தையை சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த திருமதி சரிதா வயது 29) க/பெ. பிரசாந்த் என்பவர் கடந்த 29.12.2023-ம் தேதி அன்றும், மேங்கோ ரேன்ஜ் ரேன்ஜ் (அஞ்சல்), எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி நான்சி (வயது 32) த/பெ. சிவ்சங்கர் என்பவர் கடந்த 06.01.2024 அன்றும் சிறுத்தை தாக்கியதன் காரணமாக உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
10லட்சம் ரூபாய் இழப்பீடு
விலை மதிப்பில்லாத இந்த இரு இரு உயிரிழப்புகளை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தலா 10 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
ஷாக்கிங் நியூஸ்.. கூடலூரில் சிறுத்தை தாக்கியதில் குழந்தை பலி..!