new ambulance service
ரூ.3.55 கோடி செலவில் 35 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

தமிழகத்தில் இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவையில் 865 வாகனங்கள் உள்ளன. இந்நிலையில், ரூ.3.55 கோடி செலவில் 35 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

மேலும் 102 தாய்சேய் நல மையங்களுக்கு ரூ. 86.89 லட்சம் செலவில்10 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
இந்த வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் முதலமைச்சர் எடப்பாடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
