Chidambaram TN Election Result 2022 : சிதம்பரம் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சிதம்பரம் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிதம்பரத்தில் 2019ம் ஆண்டு எம்.பி தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வென்றார். என்றாலும் இரண்டே ஆண்டுகளில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்ட கு.அ.பாண்டியன் 50% வாக்குகள் பெற்று வென்றுள்ளார். எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிதம்பரம் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1998 முதல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது சிதம்பரம். இந்நகரம் கடலூர் மாவட்த்திலுள்ள தாலுக்காவின் ஒன்றாக திகழ்கிறது. சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்