சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காவலாளியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த அந்த பெண் சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்து இரவில் இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது காவலாளி சுபாஷ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிட்டார். 

உடனே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் காவலாளி தப்பியோடியதாக கூறப்படுகிறது. செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய காவலாளியை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.