கோடம்பாக்கம் அருகே ரயில் தண்டவாளத்தில் மது அருந்திய 3 கல்லூரி மாணவர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், மனோஜ், சேகோ ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர்.

இவர்கள் மூன்று பேரும் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோடம்பாக்கம் - மாம்பலம் இடையிலான தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னை, கடற்பரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் இவர்கள் மீது மோதியது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.