chennai. thiruvarur heavey rain...school leave in thiruvarur

சென்னை மற்றும் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து இன்னும் சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டுள்ளன. இதே போன்று திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் காய்ந்தது. எனினும் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர், ராயப்பேட்டை, கேளம்பாக்கம், ஈசிஆர், சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.



பின்னர் நேற்று இரவு 11 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சென்னையின் எழும்பூர், நுங்கம்பாக்கம், அகரம், பல்லாவரம், சைதாபேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், கிண்டி, தாம்பரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது.



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பந்தல் குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம்,எருமைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் மழை பெய்தது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்டபகுதிகளில் கனமழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் அடுத்து வரும் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், கேணிக்கரை, போரவூர், காட்டூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புதுறை, கோடியக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. . மேலும் திருவள்ளூர்,தேனி,கோவை, மதுரை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், குடவாசல், மாங்குளம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை கொட்டி வருகிறது.

இதனையடுத்து மாணவர்களின் நலன் கருதி, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.