சென்னையில் எங்கு சென்றாலும் அணி நிர்வாக அனுமதி வாங்கி பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்று அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது. காவிரி பிரச்சனை நடக்கும் போது ஐபிஎல் தேவையா என்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் தற்போது சேப்பாக்கம் மைதானம் காக்கிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு தங்கள்  எதிர்பார்ப்பை வெளிப்படுத்த தமிழகமெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது இன்று நடக்கும் போட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் கிரிக்கெட் வாரியம் அதை கண்டுகொள்ளாமல் காவல்துறையை இறக்கி இந்த போட்டியை நடத்தவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தால், சுமார் 4௦௦௦ போலீசார் சேப்பாக்கம் ஸ்டேடியம் ஆகிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருவதால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. டோணிக்கும் பைக் ரைடு என்றால் ரொம்பவே பிடிக்கும், அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதே நிறைய முறை பைக்கில ஹெல்மெட் அணிந்து மாறுவேடத்தில் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர் இப்படி எல்லாம் மாறுவேடத்தில் ஜாலியாக இருந்து வருகிறார். அவர் அதிகமாக சென்னையில் தான் சுற்றியிருக்கிறார். அவருக்கு சொந்த ஊர் ராஞ்சி என்றாலும் சென்னை மிகவும் பிடிக்குமாம். இந்தியாவில் மிகவும் பிடித்த இடம் சென்னைதான் என்று அவரு கூறியுள்ளார். இவர் பொதுவாக ஹெல்மெட் அணிந்து சென்னையை சுற்றியுள்ளார். மெரினா, பெசன்ட் நகர் பீச் ரஜினி வீட்டிற்கு சென்று இருக்கிறார். சென்னையின் முக்கியமான பல இடங்களுக்கு இவர் யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து  சென்றதாக ஷாக் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படி இனிமேல் யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து பைக்கில்  செல்ல கூடாது அப்படியே வெளியில் சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிங்களை அழைத்துக் கொண்டு மாறுவேடம் போடாமல் காரில் பாதுகாப்போடு செல்ல வேண்டும் என்று தோனிக்கு கண்டிஷன்களை போட்டுள்ளனர்.