நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி ஒட்டுமொத்த நுங்கம்பக்கதையும்  ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக  தங்கள் கட்டுக்கள்  கொண்டு வந்துள்ளனர்   நுங்கம்பாக்கம்  அரசு  பள்ளி   மாணவிகள்.

அனிதாவிற்கு  நேர்ந்ததை  போல்,  எங்கள் யாருக்கும் நிகழக்கூடாது  என  சுமார் 80 கும்  மேற்பட்ட மாணவிகள்  ஒன்றிணைந்து இந்த  போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

இதனால்  கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.  மேலும்,  எவ்வளவு சொல்லியும் போராட்டத்தை  கைவிட மறுத்த  மாணவிகளை  சமாதானம்  செய்வதற்காக அந்த  பள்ளி  ஆசிரியர்கள்  சம்பவ  இடத்திற்கு  விரைந்து  வந்துள்ளனர். இருந்த போதிலும் மாணவிகள்  விடாபிடியாக  நீட் தேர்வு  கண்டிப்பாக  வேண்டாம்  என்பதை வலியுறுத்தும்  விதமாக  தங்கள் கருத்துக்களை தொடர்ந்து  முன்வைகின்றனர்.

இதனால் நுங்கம்பாக்கத்தில்  பெரும்  பரபரப்பு நிலவுகிறது. இதைதொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட வைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.