Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் குடியரசு தின விழா நடைபெறும் இடம் மாற்றம்..! புதிய இடம் எது..? என்ன காரணம் தெரியுமா..?

தமிழக அரசு சார்பாக சென்னையில் காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவை மாற்று இடத்தில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான ஆலோசனை கூட்டத்தில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 

Chennai Republic Day celebrations have been shifted due to metro rail work
Author
First Published Dec 1, 2022, 1:43 PM IST

குடியரசு தின விழா

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், சென்னை கடற்கரைச் சாலையில் காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நடைபெற்று வந்தன.  குடியரசு தின விழா நிகழ்வு நடத்தப்படும் காந்தி சிலை வளாகம் மிகவும் பாரம்பரியமானது. வெண்கலத்தாலான காந்தி சிலையை 1959-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு திறந்து வைத்தாா். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே இடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. குடியரசு தின் கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைப்பார். இதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் இருக்குதாம்! நல்ல முடிவு எடுக்கிறேன் சொல்லி இருக்காரு! அமைச்சர் ரகுபதி

Chennai Republic Day celebrations have been shifted due to metro rail work

காந்தி சிலை மாற்றம்

இந்த நிகழ்வில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அப்போது தமிழக அரசு சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதும் வழங்கப்படும். இந்தநிலையில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக காந்தி சிலை வளாகம் தடுப்பு அமைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதைக்காக காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள பகுதியில் கலங்கரை விளக்கத்துக்கான ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் மாற்றப்படவுள்ள நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டம் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது.

டீசல் விலை உயர்வு..! பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா..? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல்

Chennai Republic Day celebrations have been shifted due to metro rail work

குடியரசு தின விழா- புதிய இடம் எது.?

இதனையடுத்து,  காமராஜா் சாலையில் உள்ள உழைப்பாளா் சிலை அல்லது விவேகானந்தா் இல்லம் முன்பாக மேடை அமைத்து குடியரசு தின விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கான இடத்தை இறுதி செய்ய பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த இரண்டு இடங்களில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி எது என்பது முடிவு செய்யப்பட்டு, அந்த இடம் தோ்வு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! திமுகவினருக்கு கட்டளையிட்டு தீர்மானம்..?

Follow Us:
Download App:
  • android
  • ios