திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நலிவுற்றுள்ளார். கடந்த ஒருவார காலமாகவே உடல் நிலையில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு வாடி வருகிறார். கட்டுக்கடங்காத காய்ச்சல், நுரையில் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் நேற்று கருணாநிதி உடல் நலம் குறித்து பல வதந்திகள் பரவின. அதனையடுத்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் சில அமைச்சர்கள் உடனடியாக சென்று பார்த்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் கருணாநிதி உடல் குறித்து அறியும் நோக்கில் கோபாலபுரம் சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர். 

நேற்று இரவு உச்சக்கட்டமாக கருணாநிதிக்கு ஏதோ ஆபத்து என்ற நிலையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரது இல்லத்திற்கு முன்பு திரண்டனர். கருணாநிதியின் தீவிர விசவாசுகள் மற்றும் தொண்டர்கள் பெரு கவலையுடன் காணப்பட்டனர். 

இந்த நிலையில் தான் சென்னை ராஜாஜி அரங்கம் சுத்தம் செய்யப்பட்டு அவ்வளாகத்தில் உள்ள விளங்குகள் அனைத்தும் சரிவர வேலை செய்கிறதா என்று பார்த்து மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாத நிலையில் ராஜாஜி அரங்கத்தின் விளக்குகள் சரிசெய்யப்பட்டு வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.