மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளைப் பொறுத்தவரையிலும் 38 மாவட்டங்களிலும் சென்னையில்தான் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகி உள்ளது.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளைப் பொறுத்தவரையிலும் 38 மாவட்டங்களிலும் சென்னையில்தான் குறைந்த அளவு வாக்குப் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளைப் பொறுத்தவரையிலும் 38 மாவட்டங்களிலும் சென்னையில்தான் குறைந்த அளவு வாக்குப் பதிவாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை வாக்குப்பதிவு சராசரி 48 சதவீதமாக இருந்தது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக 59.06% பதிவாகி இருந்தன. சட்டப்பேரவை, நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் எப்போதுமே சென்னையில் வாக்குப் பதிவு குறைவாகவே உள்ளது. சென்னையில், 30,49,532 ஆண் வாக்காளர்களும் 31,21,951 பெண் வேட்பாளர்களும் 1,629 பிற வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 61,73,112 ஆகும். சென்னையின் பூர்வ குடிகளில் பெரும்பாலானோர், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் வேலைக்காகவும் தொழிலுக்காகவும் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று வாக்கைச் செலுத்துகின்றனர். அதேபோல சென்னையில் வசிக்கும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் வாக்களிக்கின்றனர். கொரோனா தொற்று அச்சமும் வாக்குப் பதிவு அளவைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் காலையில் வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே மந்தமான போக்குதான் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 3.96% வாக்குகளும், 11 மணிக்கு 17.88% வாக்குகளும் பதிவாகின. மதியம் 1 மணிக்கு 23.42% வாக்குகளும் பிற்பகல் 3 மணிக்கு 31.89 % வாக்குகளும் பதிவாகின. மாலை 5 மணிக்கு 41.68% வாக்குகள் பதிவாகின. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் சென்னையில் தான் குறைந்த அளவு வாக்குப் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
