தங்க கம்மலுக்காக, பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விருதாசலத்தைச் சேர்ந்தவர் வேல்விழி. இவர், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றினார். சூளைமேடு, வீரபாண்டி நகரில் தங்கி உள்ளார். வேல்விழி தினமும், விருதாசலத்தில் இருக்கும் உறவினரிடம் போனில் பேசுவார். ஆனால் கடந்த 6 ஆம் தேதிக்குப் பிறகு வேல்விழி பேசவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், வேல்விழி வேலை செய்யும் இடத்திலும், அவருடன் தங்கியிருந்த நர்ஸ்களிடமும் விசாரித்தனர்.

ஆனால், வேல்விழி குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், சூளைமேடு போலீசில், மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்தனர். அவர்களது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், வேல்விழியிடம் கடைசியாக செல்போனில் பேசியவர்கள் குறித்து விபவரங்களை சேகரித்தோம். வேல்விழி வேலை பார்க்கும் இடம் தங்கியிருந்த வீடு ஆகிய இடங்களில் சென்று விசாரணை நடத்தினோம். சம்பவத்தன்று வேல்விழி மட்டும் அறையில் இருந்துள்ளார். வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகலாட்சி என்பவரின் கணவர் அஜித்குமார்தான் கடைசியாக வேல்விழியை சந்தித்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினோம். விசாரணையில், வேல்விழியை கொலை செய்ததை அஜித்குமார் ஒப்புக்கொண்டார். வேல்விழியின் உடல், கோயம்பேடு காய்கறி மார்கெட் அருகில் சாக்குமூட்டையில் மறைத்து வைத்திருப்பதாக அஜித்குமர் கூறினார். சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் வேல்விழியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

வேல்விழியைக் கொலை செய்வதற்கான காரணத்தைக் கேட்டபோது, வேலைக்கு  செல்லாமல் இருந்து வந்ததாகவும், மனைவி மகாலட்சுமியிடம் வேலைக்கு செல்வதாகவும் பொய் கூறியுள்ளார். தெரிந்தவர்களிடம கடன் வாங்கி, சம்பளம் பணம் என்று கூறி மகாலட்சியிடம் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணம் யாரும் கொடுக்கவில்லை. இதனால், அஜித்குமார் வேல்விழியிடம் தங்க கம்மலை அடகு வைக்க கேட்டுள்ளார். ஆனால், கம்மலைக் கொடுக்க வேல்விழி மறுத்துள்ளர். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்போது துப்பட்டாவால் வேல்விழியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அஜித்குமார் கூறியுள்ளார். இதனை அடுத்து அஜித்குமார் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் கூறினார். தங்க கம்மலுக்காக, பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் சென்னையில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.