காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை, தாய் பாலூட்டியபோது மூச்சுத்திணறி பலியானது. இச்சம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கர்ப்பமடைந்த செலஸ்டினுக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் குழந்தைக்கு பாலூட்டினார். பின்னர் குழந்தையை தூங்க வைத்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும், செலஸ்டின் தாய் பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.