சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயக அதிகரித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயிலில் அதிகரிக்கும் கூட்டம்
நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவரும் நிலையில் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார ரயிலுக்கு இணையாக தற்போது மெட்ரோ ரயிலிலும் வேலைக்கு செல்வோர் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் அதிகளவு ஈர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணமும் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவில்லையென்றாலும் மெட்ரோ ரயில் பார்க்கிங்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இதற்கு செக் வைக்கும் வகையில் புதிய பார்க்கிங் கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ பார்க்கிங் கட்டணம் உயர்வு
சென்னையில் பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்களில் தொலைத்தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதுவரை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் 6 மணி நேரம் வரை ரூ.20 ஆகவும், 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்-சலுகை அறிவிப்பு
மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மின்சார ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்யாமல் மெட்ரோ இரயிலில் பயணித்தால் கட்டணச் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு..! உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்
