Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை மையம் தகவல்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா..?

தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department has forecast 5 days of rain in the southern Tamil Nadu and northern coastal districts
Author
Tamilnadu, First Published Jan 25, 2022, 1:59 PM IST

தென் தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம், வட கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

Chennai Meteorological Department has forecast 5 days of rain in the southern Tamil Nadu and northern coastal districts

27-ந்தேதி தென் தமிழகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். 28, 29-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

Chennai Meteorological Department has forecast 5 days of rain in the southern Tamil Nadu and northern coastal districts

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்’ என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios