சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் சிவக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தாம்பரத்தை அடுததுள்ள கூடுவாங்சேரியைச் சேர்ந்தவர் சுப்புலிங்கம். இவரது மகன் சிவக்குமார். இவர், கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வந்துள்ளார்.

கடந்த 30 நாட்களுக்கு முன்பு மாணவர் சிவக்குமார், மாயமாகியுள்ளார். சிவக்குமார் மாயமான நிலையில், சக மாணவர்கள் வீட்டுக்கு சென்றிருப்பதாக கூறி வந்தனர்.

இந்த நிலையில், கிண்டி சாலையோரம் அருகே சிவக்குமாரின் உடல் எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரேத பரிசோதனை நாளை நடைபெறும் என்றும் தெரிகிறது. மாணவன் சிவக்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து,
போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அவருக்கு யாராவது எதிர்கள் உள்ளார்களா? அல்லது ஊரில் ஏதாவது பிரச்சனையா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஐடி மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.