Asianet News TamilAsianet News Tamil

மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Chennai High Court to ban protests at Marina beach
Author
Chennai, First Published Sep 3, 2018, 12:29 PM IST

சென்னை மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. Chennai High Court to ban protests at Marina beach

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ராஜா, ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தார். Chennai High Court to ban protests at Marina beach

இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அரசு தரப்பில் மெரினாவில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. Chennai High Court to ban protests at Marina beach

மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்துள்ளனர். 
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios