Asianet News TamilAsianet News Tamil

அயோத்தியை வென்ற அறநிலையத்துறை.. ஸ்டாலின் அடித்த சனாதன சிக்ஸர்..

மேற்கு மாம்பழத்தின் அடையாளமான பழம்பெரும் மண்டபமான அயோத்யா மண்டபம் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

Chennai high court order
Author
Chennai, First Published Mar 17, 2022, 4:28 PM IST

மேற்கு மாம்பலம்:

சென்னையை பொறுத்தவரையில் மயிலாப்பூர், மாம்பலம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பிராமணர்கள் அதிகம் வசிந்து வருகின்றனர். மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்யா மண்டபம் அந்த பகுதியின் மிக பெரிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியான இப்பகுதியில் அமைந்துள்ள இந்த மண்டபம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை நெடுங்காலமாக நடந்து வரும் நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதுக்குறித்தான வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Chennai high court order

அயோத்யா மண்டபம்:

மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சூழலில் தான், இந்த மண்டபத்தை ஆரம்பத்தில் நிர்வகித்து வந்த இராம சமாஜம் அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, நாகா எண் 1947 /2012 31.12.2013 எண் கொண்ட தமிழக அரசு ஆணையின் படி, அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. அன்று முதல் இன்று வரை மண்டபத்தினை அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.

Chennai high court order

இராம சமாஜம்:

இதனை எதிர்த்து ,இராம சமாஜம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர், மாம்பல பகுதியின் அறநிலையத்துறை தக்கார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அப்போது அந்த வழக்கு விசாரணையின் போது, மண்டபத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்து அபிஷேகம் ,ஆராதணை செய்து வழிப்பாடு நடந்தது எனவும் உண்டியல் வைத்து மக்களிடம் காணிக்கையும் பெறப்பட்டது எனவும் இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Chennai high court order

இந்துசமய அறநிலையத்துறை:

எனவே, TNHRCE ACT எனும் சட்டத்தின் படி, சிலை வைத்து வழிப்பாடு நடைபெறுவதால் இந்த மண்டபம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மண்டபம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பிராமணர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Chennai high court order

சென்னை உயர்நீதிமன்றம்:

அதில் அயோத்யா மண்டபம் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அதில் எந்தவொரு தனியார் அமைப்புகளும் உரிமை கொண்டாட கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராம சமாஜம் சார்பில் தொடரப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அயோத்யா மண்டபம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று உத்தரவு வெளியாகியுள்ள நிலையில் இதுக்குறித்து ராம சமோஜ தலைவர் ரவிசந்திரனிடம் கேட்ட தொடர்புக்கொண்ட போது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை..

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை...? பட்ஜெட்டை புறக்கணிக்க அதிமுக திட்டம்..?

Follow Us:
Download App:
  • android
  • ios