உரிமை மீறல் பிரச்சினையில் வரும் 14ஆம் தேதி வரை திமுக உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகருக்கு சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரவையில் குட்கா காட்டிய விவகாரம் தொடர்பாக அவை உரிமை மீறல் குழு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 21  பேருக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தது.

தங்கள் மீதான நடவடிக்கைக்கு தடை கோரி 21 உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் அவர்கள் மீதான சபாநாயகர்  நடவடிக்கைக்கு இம்மாதம் 14 ஆம் தேதிவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாதென்று இடைக்கால தடைவிதித்துள்ளது.

மேலும், இம்மனு மீதான விசாரணை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.