Asianet News TamilAsianet News Tamil

வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க திட்டம் இருக்கா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன்...

Chennai High Court Judge Kripabharan has asked the central government what you plan to do to tackle the unemployment problem of engineering graduates.
Chennai High Court Judge Kripabharan has asked the central government what you plan to do to tackle the unemployment problem of engineering graduates.
Author
First Published Oct 27, 2017, 8:21 PM IST


பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாடத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்துளீர்கள் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரண் கேள்வி எழுப்பியுள்ளார். 

பொறியியல் படிப்பு முடித்து விட்டு ஒரு வருடத்திற்கு ஏராளமான மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரிகளே நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் அதற்கான வேலை வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 

மேலும் குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முக தேர்வு நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முக தேர்வு நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவில் இருந்து எத்தனை பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். 

பொறியியல் மேலும் கல்லூரிகளை மூடும் நடவடிக்கை ஏதும் உண்டா எனவும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாடத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்துளீர்கள் என்று மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios