இருபது ரூபாய் மருத்துவர் என்று மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெகன்மோகன், சென்னை, மந்தைவெளியில் நேற்று மாரடைப்பால் காலமானார். அன்னை தெரேசா போன்ற அவர் மறைந்தது பெரும் இழப்பு என்று அப்பகுதி ஏழை எளிய மக்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். 

சாதாரண காய்ச்சல் என்றாலை மருத்துவக் கட்டணமாக குறைந்தது 500 ரூபாயைத் தாண்டும். சாதாரண மக்கள், தனியார் டாக்டர்களை நாடுவது என்பது மிகுந்த சிரமம்தான். இந்த நிலையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், 20 ரூபாய் டாக்டர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்துள்ளார். மந்தைவெளி, மயிலாப்பூரைச் சேர்ந்த ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினரின் நோய் தீர்க்கும் மருத்துவராக அவர் இருந்துள்ளார். 

அவரது பெயர் டாக்டர் ஜெகன்மோகன் (76). ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜெகன்மோகன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.1990 ஆம் ஆண்டு வரை தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம், இவர் 2 ரூபாய் மட்டும் பெற்றுவந்த அவர், 1999 ஆம் ஆண்டு முதல் சிகிச்சைக் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினர். 

சில வருடங்களுக்குப் பிறகு கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்தினார். மக்களுக் குறைந்த விலையில் சேவை செய்து வந்த டாக்டர் ஜெகன்மோகன் நேற்று மாலை, உடல்நலமின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து, அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள், டாக்டர் ஜெகன்மோகன் அன்னை தெரேசா போன்றவர் என்றும் புகழ்கின்றனர். அவரது இழப்பு மிகுந்த வலியை தருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.