Asianet News TamilAsianet News Tamil

சென்னை.. இன்றும் மின்சார ரயில் சேவை ரத்து.. வெளியூர் செல்லும் பல ரயில் சேவைகளுக்கும் ரத்து - லிஸ்ட் இதோ!

Trains Cancelled : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை நேற்று வெளுத்து வாங்கியதால் மின்சார ரயில் சேவை மட்டுமின்றி பல்வேறு வெளியூர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

Chennai Electric Train Service stopped many trains cancelled from Central and Egmore full list ans
Author
First Published Dec 5, 2023, 8:05 AM IST

இந்நிலையில் இன்று சென்னையில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், அதிக மழையும் சூறைக்காற்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை இன்றும் (டிசம்பர் 5ம் தேதி) இருக்காது என்றும், தண்டவாள பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் அதை சீர் செய்ய அதிக நேரம் தேவைப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளிவந்துள்ளது. 

அதேபோல நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த பல வெளியூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல சென்னை சென்ட்ரலுக்கு பிற வெளியூர்களில் இருந்து வரவேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சென்னையில் இன்னும் நிலைமை சீரடையாததால் இன்றும் எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Chennai Heavy Rain:தலைநகரை தலைகீழாக புரட்டிபோட்ட கனமழை! மீண்டும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம்!

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்த பட்டியல் பின்வருமாறு..

வண்டி எண் : 20607 சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத்    
வண்டி எண் : 12007 சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி
வண்டி எண் : 12675 சென்னை சென்ட்ரல் - கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 16057 சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 22625 சென்னை சென்ட்ரல் - பெங்களூரு டபுள் டெக்கர் 
வண்டி எண் : 12639 சென்னை சென்ட்ரல் - மைசூரு பிரிந்தாவன் 
வண்டி எண் : 16093 சென்னை சென்ட்ரல் - லக்னோ ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 06741 சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை MEMU எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் 
வண்டி எண் : 22643 எர்ணாகுளம் - பாட்னா ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 12842 சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 12390 சென்னை சென்ட்ரல் - கயா எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 22870 சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 12656 சென்னை சென்ட்ரல் - அஹமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ்
வண்டி எண் : 06035 சென்னை சென்ட்ரல் - கோவை Special Fare வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  
வண்டி எண் : 22671 சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 06025 சென்னை எழும்பூர் - புதுச்சேரி MEMU எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் 
வண்டி எண் : 22675 சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் 
வண்டி எண் : 12651 - மதுரை - ஹசரத் நிசாமுதீன் தமிழ் நாடு சம்பர்க் கரண்டி எக்ஸ்பிரஸ் 

சென்னையில் தொடர் மழை.. தேங்கி நிற்கும் தண்ணீர் - இன்று காலை 9 மணி வரை விமானநிலையம் மூடல் - புதிய அப்டேட்!

மேற்குறிய ரயில்கள் இல்லாமல் மேலும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடி தகவல்களுக்கு சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலைய அவசர எண்களை வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios