நாய்க்கறி சர்சையால் அசைவ ஓட்டல்களில் விற்பனை மிகவும் மந்தமாக காணப்பட்டது என ஓட்டல் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பூனைக்கறி பீதியை தொடர்ந்து, நாய்க்கறி பிரச்னை ஏற்பட்டுள்ளதால், பிரியாணியை சாப்பிட பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கடந்த 17-ம் தேதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பின்னர் அந்த ரயில் காலை 10.40 மணிக்கு மன்னார்குடிக்கு நோக்கி புறப்பட்டது. அப்போது ஊழியர்கள் இறக்கி முகவரியை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது ரயில் பெட்டிகளில் இருந்து இறக்கப்பட்ட சில பெட்டிகளில் முகவரி எதுவும் தெளிவாக இல்லை. மேலும், அந்த பார்சல்களில் இருந்து துர்நாற்றம் மற்றும் ஈக்களும் மொய்த்திருந்தது. 

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது இறைச்சிகள் தோல் உரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த இறைச்சியின் வால் மிக நீளமாக இருந்ததால் அது நாய்க்கறியாக இருக்குமோ என போலீசார் சந்தேமடைந்தனர். உடனே, இதுகுறித்து ரயில்வே போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் இருந்த அனைத்து பார்சல்களையும் ஊழியர்கள் உதவியுடன் பிரித்து சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு பெட்டியில் மட்டும் அழகிய மாட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது. மற்ற பெட்டிகளில் நாய் இறைச்சி இருப்பது தெரிவந்தது. ரயில் நிலையத்தில் இருந்த அனைத்து பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பார்சல்களில் இருந்தும் சில இறைச்சி துண்டுகளை எடுத்து சோதனைக்காக வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் வந்த இறைச்சி அனைத்தும் அழுகி தூர்நாற்றம் அடித்ததால் அதை பறிமுதல் செய்து மண்ணில் புதைத்து அழிப்பதற்கு கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடக்கிற்கு அனுப்பி வைத்தனர். 

இது விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் சென்னையில் சில ஓட்டல்களில், பிரியாணியில் ஆட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி, பூனை ஆகியவற்றை கொன்று ஆட்டுக்கறியுடன் கலந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் தமிழகத்திற்குள் வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் எங்கள் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது ரயில்கள் மூலம் பெருமளவு கொல்லப்பட்ட நாய்களின் இறைச்சி கொண்டுவருவது தெரியவந்துள்ளது என்றார். 

சிறிய மற்றும் நடுத்தர, தெருவோர கடைகள் மற்றும் சில ஸ்டார் ஓட்டல்களில் வட இந்தியர்களுக்காக நாய் கறிகள் ரகசியகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஸ்டார் ஓட்டலில் நாய் கறிகள் ரகசியமாக நன்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை விசாரித்து வருகிறோம். சென்னையில் ஆயிரம் கிலோ அளவுக்கு நாய் இறைச்சி கடத்தி வந்ததும் அது சிக்கியதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.