சென்னை மக்களே.. நாளைக்கும் ‘அது’ இருக்கு… மறந்துடாதீங்க…
சென்னையில் நாளை 1600 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னையில் நாளை 1600 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் சார்பில் அரசின் வழிகாட்டுதல் முறைகளை கவனமாக பின்பற்றி சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் உத்தரவுப்படி, அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 1.35 லட்சம் பேருக்கு ஊசி போடப்பட்டது. 1600 முகாம்கள் மூலம் 1,91,350 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. பின்னர் செப். 19ம் தேதி 2,02,932 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதால் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் நாளை மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. 1600 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஊசி போடப்படும்.
முகாம்கள் பற்றிய விவரங்களை https://chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் 044 25384520, 044 46122300 என்ற தொலைபேசி எண் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.