சென்னை விமான நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்லும் இண்டிகோ விமானத்தில் செல்ல கோவையை சேர்ந்த கவிதா (35) என்ற பெண் வந்தார். அவர் மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. 

ஆகையால் மயக்க நிலையில் உள்ளவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. இதனால் அவரது பயணத்தை ரத்து செய்தனர். 
பின்னர் மாலை சுமார் 3.30 மணியளவில், சர்வதேச முனையத்தின் 2-வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிக்கு சென்றார். அங்குள்ள கைப்பிடி சுவர் ஓரமாக நின்ற அவர், திடீரென சுவர் மீது ஏறி கீழே குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் இந்த பெண்ணை காப்பாற்றினர்.  பின்பு இந்த மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். 

மயக்க நிலையில் உள்ள அந்த பெண்ணின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் 50,000 ரூபாய் மற்றும் 3 செல்போன்கள் இருந்தன. ஒரு பேப்பரில் மஞ்சுளா என்ற பெயரும் தொலைபேசி எண்ணும் இருந்தது. அந்த நம்பருக்கு தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய பெண் தனது தோழி கவிதா எனக்கூறியுள்ளார்.

 

இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமைனயில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். அவரது குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை வந்ததாகவும் கூறினார். தற்போது வேலையில் இருக்கிறேன் தன்னால் வரமுடியாது. வேலை முடிந்ததும் தாம் அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம், அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.